LITERARY FINDINGS

International Journal of Multidisciplinary Research

ISSN : 2278 – 2311 

4. JOURNAL QUALITY CRITERIA

இதழ் தர நிர்ணய அளவுகோல்

4.1. Academic Contribution

கல்விசார் பங்களிப்பு:

ஆயுத எழுத்து பன்னாட்டு தமிழியல் ஆய்விதழுக்கு  அனுப்பப்படும் ஆய்வுக்கட்டுரைகளின் உள்ளடக்கம் பின்வரும் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

ஊக்கம் (Motivation):

கட்டுரை ஏன் எழுதப்பட்டது, அதன் பின்னணி என்ன, என்ன நோக்கத்திற்காக ஆய்வு செய்யப்பட்டது என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்க அல்லது ஒரு புதிய கோட்பாட்டை நிறுவ என்ன தூண்டுதலாக இருந்தது என்பதை குறிப்பிட வேண்டும்.

ஏற்கனவே உள்ள அறிவின் முன்னேற்றம் (Advancement of existing Knowledge):

கட்டுரை, ஏற்கனவே இருக்கும் அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

புதிய தகவல்களை வழங்குதல், முந்தைய ஆய்வுகளின் குறைபாடுகளைச் சரிசெய்தல் அல்லது புதிய ஆராய்ச்சி முறைகளை அறிமுகப்படுத்துதல் போன்ற பங்களிப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

கொள்கை உருவாக்கத்திற்கான பயன்பாடு (Applicability for policy Making):

கட்டுரையின் முடிவுகள் அல்லது கண்டுபிடிப்புகள் கொள்கை உருவாக்கத்திற்கு எவ்வாறு பயன்படும் என்பதை விளக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரச்சினைக்குத் தீர்வு காண அல்லது ஒரு புதிய திட்டத்தை உருவாக்க இந்த ஆய்வு எவ்வாறு உதவும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

மேற் குறிப்பிட்ட மூன்று அம்சங்களையும் பூர்த்தி செய்யும் கட்டுரைகள் மட்டுமே ஆயுத எழுத்து இதழில் வெளியிடத் தகுதியானவையாகக் கருதப்படும்.

4.2 Conformity to journal scope

ஆய்விதழ் எல்லைக்கு இணக்கம் :

 

ஆய்வுக் கட்டுரை ஆயுத எழுத்து ஆய்விதழின் எல்லைக்கு (Journal Scope), இணக்கமாக இருக்க வேண்டும். ஆய்விதழ் எல்லை என்பது, எந்த வகையான ஆராய்ச்சி அல்லது தலைப்புகளை இவ்விதழ் வெளியிடும் என்பதை வரையறுத்து அதனை  இவ்விதழின் பொருளடக்கக்  கொள்கை ( Journal Editorial Policy ) என்னும் மூன்றாவது தலைப்பில் நோக்கம், குறிக்கோள் மற்றும் எல்லை பகுதியில் ( 3.1 Aims, Objectives, and Scope.) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரைகள் ஆய்விதழின் குறிப்பிடப்பட்ட நோக்கங்கள் மற்றும் இலக்குகளுடன் ஒத்துப்போக வேண்டும் என்பதை ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

Translate »