LITERARY FINDINGS

International Journal of Multidisciplinary Research

ISSN : 2278 – 2311 

3. JOURNAL EDITORIAL POLICY

பொருளடக்க கொள்கை

 3.1. Aims, Objectives, and Scope.

நோக்கம், குறிக்கோள் மற்றும் எல்லை :

நோக்கம்:

தமிழ் மொழி, கலை, இலக்கியம், வரலாறு, பண்பாட்டு மொழியியல் மற்றும் நாட்டுப்புறவியல் உள்ளிட்ட தமிழ் ஆய்வுகளுக்கான ஒரு தளத்தை உருவாக்குவதே இந்த இதழின் நோக்கமாகும்.

குறிக்கோள்:

தமிழ் மொழி மற்றும் பண்பாடு பற்றிய புரிதலை மேம்படுத்துதல், தமிழ் மரபுகளைப் பாதுகாத்தல், வருங்கால சந்ததியினருக்கு அவற்றைக் கடத்துதல், சமூக சமத்துவம் மற்றும் நீதிக்கான அடித்தளத்தை உருவாக்குதல் மற்றும் படைப்பு சிந்தனை மற்றும் விமர்சனத் திறன்களை வளர்த்தல் ஆகியவை இந்த இதழின் குறிக்கோளாகும்.

எல்லை:

சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையிலான இலக்கிய ஆய்வுகள், நாட்டுப்புறவியல் ஆய்வுகள், இலக்கணம் மற்றும் மொழியியல் ஆய்வுகள், இசை கலை, இலக்கிய, வரலாற்று, பண்பாட்டு ஆய்வுகள் மற்றும் தமிழ் தொடர்பான தரமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவை இதழின் எல்லைக்குள் அடங்கும்.

 3.2. Subject Areas

பொருண்மை :

மொழி:

மொழியியல்:

(தமிழ் மொழியின் அமைப்பு, இலக்கணம், ஒலியியல், வரலாறு)

இலக்கணம்:

(தமிழ் மொழியின் இலக்கண விதிகள் மற்றும் அமைப்புகள்)

அறிவியல் தமிழ்:

(அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் பயன்பாடு)

மொழிப் பண்பாடு:

(வட்டார வழக்குகள், பழமொழிகள், மரபுச் சொற்கள்)

தமிழ் மொழி வரலாறு

இலக்கியம்:

நவீன இலக்கியம்: (19 ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை)

சங்க இலக்கியம் :( பழமையான சங்க இலக்கியப் படைப்புகள்)

இலக்கிய விமர்சனம்   

கலை:

இசையியல் (Musicology) தமிழ் இசை, கர்நாடக இசை, நாட்டுப்புற இசைகளின் வரலாறு, கோட்பாடுகள், நடைமுறைகள்.

நடனவியல் (Dance Studies) தமிழ் நடனத்தின் வரலாறு, வகைகள், நுட்பங்ககள் .

நாடகவியல் (Theatre Studies) தமிழ் நாடகங்களின் வரலாறு, வகைகள், நுட்பங்கள் மற்றும் நாடக மரபுகள்

ஓவியக்கலை (Painting) தமிழ் ஓவியங்களின் வரலாறு, வகைகள், நுட்பங்கள் .

சிற்பக்கலை (Sculpture) தமிழ் சிற்பங்களின் வரலாறு, வகைகள், நுட்பங்கள் .

பண்பாடு:

மானுடவியல் (Anthropology) தமிழ் மக்களின் பண்பாடு, சமூக அமைப்பு, பழக்கவழக்கங்கள்

சமூகவியல் (Sociology) தமிழ் சமூகத்தின் அமைப்பு, செயல்பாடுகள், மாற்றங்கள்

வரலாறு (History) தமிழ்நாட்டின் வரலாறு, அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள், வரலாற்று நிகழ்வுகள், தொல்லியல் கண்டுபிடிப்புகள்.

தத்துவம் (Philosophy) தமிழ் தத்துவ மரபுகள்.

மருத்துவம் (Medicine) தமிழ் மருத்துவ முறைகள்.

நாட்டுப்புறவியல்:

தமிழ் மக்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், கதைகள் ,பாடல்கள் மற்றும் பாரம்பரிய விழாக்கள்.

வரலாறு:

தமிழ் மொழி மற்றும் பண்பாடு தொடர்பான வரலாற்று நிகழ்வுகள், நபர்கள் மற்றும் முன்னேற்றங்கள்.

 

3.3. Article Processing Charge (APC)

பதிப்புக் கட்டணம்:

ஆயுத எழுத்து  இதழோ இதனை வெளியிடும் பல்லவி பதிப்பகம்  நிறுவனமோ அரசாங்கம் அல்லது தனியார் தொண்டு நிறுவனங்களிடமிருந்து எந்தவித நன்கொடையும் பெறுவதில்லை. எனவே, ஆய்வுக் கட்டுரை பதிப்புக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் இதழ் அச்சுப்பணி, தாள், நிர்வாக செலவுகள் போன்ற காரணங்களுக்காக  ஆய்வாளர் தமது பங்களிப்பு தொகையாக ரூ. 3300/- மட்டும் பதிப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.

3.4. Publishing Time Line

வெளியீட்டு காலக்கோடு:

கடந்த இரண்டு காலமாக காலாண்டு இதழாக வெளிவந்து கொண்டிருந்த ஆயுத எழுத்து ஜனவரி 2025 முதல் மாத  இதழாக, வெளியாவதால் கட்டுரைகள்  விரைவாக  பதிப்பிக்கப்பெறும்.  இருப்பினும், ஆய்வாளர்கள் கீழ் குறிப்பிடும், இதழின்  வெளியீட்டு காலக்  கோடுகளை கவனத்தில் கொண்டு கட்டுரைகளை அனுப்ப வேண்டும். இந்த கால அளவுகளுக்கு பின்னர் வரும் கட்டுரைகள் அடுத்து வரும் பதிப்புகளுக்கு மட்டுமே பரிசீலிக்கப்படும்.

இதழ் வெளியாகும் மாதம்:

ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜுலை,  ஆகஸ்ட், செப்டெம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர். 

3.5. Acceptance Rate

கட்டுரைகளை ஏற்றுக்கொள்ளும் விகிதம்:

இதழின் தலையங்க – பதிப்புக் கொள்கையின்படி, கட்டுரைகளை ஏற்றுக்கொள்ளும் விகிதம் (Acceptance Rate) என்பது 30% ஆகும். அதாவது  சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளில் 30 விழுக்காடு  வெளியிடுவதற்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

இருப்பினும், இந்த விகிதம் பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடலாம்.

கட்டுரைகளின் தரம்:

சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் இதழின் தரத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

இதழின் நோக்கம் மற்றும் எல்லை:

கட்டுரைகள் இதழின் நோக்கம் மற்றும் எல்லைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

மதிப்பாய்வாளர்களின் கருத்து:

மதிப்பாய்வாளர்கள் கட்டுரையை ஏற்றுக்கொள்வதற்கு பரிந்துரைக்க வேண்டும்.

Translate »