LITERARY FINDINGS
International Journal of Multidisciplinary Research
ISSN : 2278 – 2311
2. EDITORIAL BOARD CRITERIA
ஆசிரியர் குழு அளவுகோல்கள்
2.1. Editorial Board Details
ஆசிரியர்குழு விவரங்கள்
ஆசிரியர்
முனைவர் சி.தியாகராசன்
அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை,
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
மின்னஞ்சல்: thiyagarajan.c@tamiluniversity.ac.in
நிபுணத்துவம்: நவீன இலக்கியம், சங்க இலக்கியம், அறிவியல் தமிழ், நாட்டுப்புறவியல்.
இணை ஆசிரியர்
முனைவர் ப.சங்கர்கணேஷ்
பாரதியார் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.
மின்னஞ்சல்: sankarganesh@buc.edu
நிபுணத்துவம்: தமிழ் இலக்கியம் மற்றும் மொழி.
ஆசிரியர்குழு
முனைவர் செல்வஜோதி இராமலிங்கம்
மலேசிய மொழிகள் மற்றும் பயன்பாட்டு மொழியியல்துறை, மொழிகள் மற்றும் மொழியியல் பீடம்,
மலேசியா பல்கலைக்கழகம்-50603, கோலாலம்பூர், மலேசியா.
மின்னஞ்சல்: selvajothi@um.rdu.my
நிபுணத்துவம்: மலேசிய மொழிகள் மற்றும் பயன்பாட்டு மொழியியல்.
முனைவர் நிருபா.எஸ்.ஜெயசுந்தர
மொழிகள் மற்றும் தொடர்பியல் ஆய்வுகள் துறை, தொடர்பியல் மற்றும் வணிக ஆய்வுகள்பீடம்,
திருகோணமலைவளாகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
மின்னஞ்சல்: jayasundaran@esn.ac.lk
நிபுணத்துவம்: மொழிகள் மற்றும் தொடர்பியல் ஆய்வுகள்.
முனைவர் என்.ரமேஷ்
பயன்பாட்டு மொழியியல் மற்றும் மொழிபெயர்ப்பு ஆய்வுகள்மையம்,
ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஹைதராபாத்-500046, தெலங்கானா.
மின்னஞ்சல்: drnellai008@gmail.com
நிபுணத்துவம்: பயன்பாட்டு மொழியியல் மற்றும் மொழிபெயர்ப்பு ஆய்வுகள்.
முனைவர் பி.ஜெயகிருஷ்ணன்
தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகம், கரியாவட்டம், திருவனந்தபுரம்-81, கேரளா.
மின்னஞ்சல்: pjktamil@gmail.com
நிபுணத்துவம்: தமிழ்இலக்கியம்மற்றும்மொழி.
முனைவர் வி.தனலட்சுமி
சுப்பிரமணியபாரதி தமிழ்மொழி மற்றும் இலக்கியப்பள்ளி, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி.
மின்னஞ்சல் : dhanagiri@gmail.com
நிபுணத்துவம்: தமிழ்மொழி மற்றும் இலக்கியம்.
முனைவர் சு.ரமேஷ்
தமிழ்த்துறை, சமூக அறிவியல் மற்றும் மானுடவியல்பள்ளி, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்,
நீலக்குடி, திருவாரூர்-610 005.
மின்னஞ்சல்: drnellai008@gmail.com
நிபுணத்துவம்: தமிழ்மொழி மற்றும் இலக்கியம், சமூக அறிவியல் மற்றும் மானுடவியல்
எஸ்.ரவி
தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், நீலக்குடி, திருவாரூர்-610 005.
மின்னஞ்சல்: raviarchaeologist@gmail.com
நிபுணத்துவம்: தமிழ்மொழி மற்றும் இலக்கியம்.
முனைவர் பி.இளையபிள்ளை
இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்- 613 010.
மின்னஞ்சல்: pelayapillai@gmail.com
நிபுணத்துவம்: தமிழ் இலக்கியம்.
முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன்
வெளிநாட்டுத் தமிழ் ஆய்வுகள் துறை,
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 010.
மின்னஞ்சல்: kurinjivenden@gmail.com
நிபுணத்துவம்: வெளிநாட்டுத் தமிழ் ஆய்வுகள்.
முனைவர் பி.சந்திரமோகன்
மொழியியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம்-608002.
மின்னஞ்சல்: chandruling@gmail.com
நிபுணத்துவம்:மொழியியல்.
முனைவர் பி.ராஜேஷ்
மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613 010.
மின்னஞ்சல்: bagavathirajesh1974@gmail.com
நிபுணத்துவம்:மொழிபெயர்ப்பு ஆய்வுகள்.
முனைவர் தி.நெல்லையப்பன்
தமிழ் ஆய்வுகள்பள்ளி,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை-625021.
மின்னஞ்சல்: drnellai008@gmail.com
நிபுணத்துவம்:தமிழ் ஆய்வுகள்.
முனைவர் ஜெ.சந்திரகலா
தமிழ் ஆய்வுகள்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி- 620024.
மின்னஞ்சல்: dceseyon@gmail.com
நிபுணத்துவம்:தமிழ் ஆய்வுகள்.
முனைவர் க.மைதிலி
பெரியார் பல்கலைக்கழகம், சேலம்-636011.
மின்னஞ்சல்: tamilmythili@periyaruniversity.ac.in
நிபுணத்துவம்: தமிழ்மொழி மற்றும் இலக்கியம்.
முனைவர் பி.செல்வகுமார்
தமிழ்மொழி மற்றும் மொழியியல் பீடம், பன்னாட்டுதமிழ் ஆய்வு நிறுவனம், CIT வளாகம், தரமணி, சென்னை-600 113.
மின்னஞ்சல்: pselvakumaar@rediffmail.com
நிபுணத்துவம்: தமிழ்மொழி மற்றும் மொழியியல்.
முனைவர் சு.அரங்கநாதன்
தமிழ் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் பள்ளி,
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சைதாப்பேட்டை, சென்னை-600015.
மின்னஞ்சல்: arangantnou@gmail.com
நிபுணத்துவம்:தமிழ்மொழி, பண்பாடு மற்றும் இலக்கியம்.
நிர்வாக ஆசிரியர்
முனைவர் ஆர்.நிர்மலாதேவி
தமிழ்த்துறை, வெள்ளாளர் மகளிர்கல்லூரி (தன்னாட்சி), திண்டல், ஈரோடு – 638012.
மின்னஞ்சல்: prnirmaladevi@gmail.com
நிபுணத்துவம்:தமிழ்மொழி மற்றும் இலக்கியம்.
பதிப்பாசிரியர்
நல்.நடராசன்
நிர்வாக இயக்குனர், பல்லவி பதிப்பகம், ஈரோடு-638153.
மின்னஞ்சல்: tnnallnatarajan@gmail.com
2.2. Editorial Board Composition
ஆசிரியர்குழு அமைப்பு
“ஆயுத எழுத்து” இதழ், பல்வேறு தமிழ் ஆய்வுத்துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர் குழுவைக் கொண்டுள்ளது. இந்தக்குழுவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இலக்கியம், இசை, நாடகம், மொழியியல், நாட்டுப்புறவியல், இலக்கணம், வரலாறு மற்றும் பண்பாடு போன்ற பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஆவர்.
முனைவர் சி. தியாகராசன்
தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்.
HOME PAGE :
முவர் ப. சங்கர்கணேஷ்
பாதியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இணை ஆசிரியர்.
HOME PAGE :
https://b-u.ac.in/faculty-user/311
முனைவர் செல்வஜோதி இராமலிங்கம்
மலேசியப் பல்கலைக்கழகத்தின் மலேசிய மொழிகள் மற்றும் பயன்பாட்டு மொழியியல் துறையில் பணிபுரியும் பேராசிரியர்.
HOME PAGE :
https://umexpert.um.edu.my/selvajothi
முனைவர் நிருபா.எஸ்.ஜெயசுந்தர
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழிகள் மற்றும் தொடர்பியல்துறையின் மூத்தவிரிவுரையாளர்.
முனைவர் பி. ஜெயகிருஷ்ணன்
கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர்.
முனைவர் வி. தனலட்சுமி
பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணியபாரதி தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பள்ளியின் இணைப்பேராசிரியர்.
HOME PAGE :
https://www.pondiuni.edu.in/faculy_profiles/dr-dhanalakshmi-v/
முனைவர் சு. ரமேஷ்
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் மற்றும் மனிதநேயப்பள்ளியின் தமிழ்த்துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்.
எஸ். ரவி
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர்.
HOME PAGE :
https://cutn.ac.in/staff-members/prof-s-ravi/
முனைவர் பி. இளையபிள்ளை
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்துறை பேராசிரியர்.
HOME PAGE :
https://www.tamiluniversity.ac.in/english/faculty/department-of-literature/
முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டுத் தமிழியல் ஆய்வுத்துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்.
முனைவர் பி. சந்திரமோகன்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் CAS பேராசிரியர்.
HOME PAGE :
https://annamalaiuniversity.ac.in/faculty_view.php?id=05645&dc=L03
முனைவர் தி. நெல்லையப்பன்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ் ஆய்வுப்பள்ளியின் இணைப்பேராசிரியர்.
HOME PAGE :
https://www.annamalaiuniversity.ac.in/faculty_view.php?id=08337&dc=L01
முனைவர் என்.ரமேஷ்
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு மொழியியல் மற்றும் மொழிபெயர்ப்பு ஆய்வுமையத்தின் இணைப் பேராசிரியர்.
HOME PAGE :
https://centres.uohyd.ac.in/calts/people/
முனைவர் பி. ராஜேஷ்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத் துறையின் இணைப்பேராசிரியர்.
HOME PAGE :
https://www.tamiluniversity.ac.in/english/distance-education-2/director/
முனைவர் ஜெ. சந்திரகலா
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ் ஆய்வுத்துறையின் இணைப்பேராசிரியர்.
முனைவர் க. மைதிலி
பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியர்.
முனைவர் பி. செல்வகுமார்
சென்னையிலுள்ள சர்வதேச தமிழ் ஆய்வுநிறுவனத்தின் தமிழ்மொழி மற்றும் மொழியியல் பீடத்தின் இணைப்பேராசிரியர்.
HOME PAGE :
https://ulakaththamizh.in/teachers#
முனைவர் சு. அரங்கநாதன்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மற்றும் பண்பாட்டு ஆய்வுப்பள்ளியின் உதவிப்பேராசிரியர்.
HOME PAGE :
https://tnou.ac.in/Documents/Profile/Dr.-Aranganathan.pdf
முனைவர் ஆர். நிர்மலாதேவி
ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லூரியின் (தன்னாட்சி) தமிழ்த்துறைத்தலைவர்.
2.3 Efficient Editorial / Review Process
செம்மையான ஆய்வு / மதிப்பாய்வு முறைகள் :
செம்மையான ஆய்வு முறை:
உண்மைத்தன்மை மற்றும் அசல் தன்மை :
ஆய்வாளர்கள் சமர்ப்பிக்கும் அனைத்து கட்டுரைகளும் அவர்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
வேறொருவரின் படைப்புகளை கையாண்டால், அதற்கு உரிய அங்கீகாரம் மற்றும் மேற்கோள்கள் வழங்கப்பட வேண்டும்.
முன்பு வெளியிடப்பட்ட கட்டுரைகள் அல்லது ஆய்வுகளின் நகலாகவோ அல்லது திருத்தப்பட்ட வடிவமாகவோ இருக்கக்கூடாது.
தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு :
ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் தரவுகள் நம்பகமான ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டிருக்க வேண்டும்.
தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு முறைகள் வெளிப்படையானதாகவும், அறிவியல் அணுகு முறைப்படி இருக்க வேண்டும்.
தரவு கையாளுதலில் எந்தவிதமான மோசடிகளும் இருக்கக்கூடாது.
மேற்கோள்கள் மற்றும் ஆதாரங்கள் :
கட்டுரையில் பயன்படுத்தப்படும் அனைத்து மேற்கோள்களும், ஆதாரங்களும் சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.
மேற்கோள் மற்றும் ஆதாரங்களை குறிப்பிடுவதற்கான முறைகள் (APA, MLA போன்றவை) கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
பிழையின்மை :
கட்டுரையில் எந்தவிதமான இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகள், அல்லது கருத்துப் பிழைகள் இருக்கக்கூடாது.
கட்டுரை அனுப்புவதற்கு முன், ஆய்வாளர்கள் தங்களின் கட்டுரையை கவனமாக சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
வெளியீட்டு நெறிமுறை:
ஒரு கட்டுரை வேறொரு இதழில் வெளியிடப்பட்டிருந்தால், அல்லது வெளியிடப்பட இருந்தால், அது “ஆயுத எழுத்து” ஆய்வு இதழில் வெளியிடப்படக்கூடாது.
“ஆயுத எழுத்து” ஆய்வு இதழில் வெளியிடப்படும் கட்டுரைகள், ஆசிரியர்களின் அறிவுசார் சொத்து. எனினும், கட்டுரையின் பதிப்புரிமை “ஆயுத எழுத்து” ஆய்வு இதழுக்கு வழங்கப்படும்.
ஆய்வு நெறிமுறை:
மனிதர்கள் அல்லது விலங்குகளை உள்ளடக்கிய ஆய்வுகளில், உரிய நெறிமுறைகள் மற்றும் அனுமதிகள் பெறப்பட்டிருக்க வேண்டும்.
ஆய்வில் பங்கேற்பவர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மதிக்கப்பட வேண்டும்.
ஆய்வாளர் கடமைகள் :
ஆய்வாளர்கள் தங்களின் கட்டுரைகளை சரியான நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டுரையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யவும், விமர்சனங்களுக்கு பதிலளிக்கவும் தயாராக இருக்க வேண்டும்.
Ethics Policy
நெறிமுறைக் கொள்கை :
பதிப்புரிமைச் சட்டத்தின் எந்த ஒரு விதிமுறைகளையும் மீறக்கூடாது என்பதில் கவனமாக இருக்குமாறு ஆய்வாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கட்டுரை எழுவதற்கு பயன்படுத்திய நூல்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள், இணையத் தளங்கள் ஆகியவை பதிப்புரிமை பெற்றிருந்தால் அவர்களிட மிருந்து இசைவு பெற்று அக்கடிதத்தினை ஆய்வாளர் தமது கட்டுரையுடன் இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆவணங்கள், ஆய்வேடுகள், நூல்கள், இணையதளங்கள் போன்றவற்றில் கட்டுரை எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் தரவுகள், கருத்துக்கள் குறித்து ஆய்வாளர் தரப்பில் செய்யப்படும் எந்த ஒரு விதி மீறல்களுக்கும் ஆயுத எழுத்து ஒரு போதும் பொறுப்பேற்காது.
இதழுக்கு சந்தா கட்டணம் செலுத்துவதை அடிப்படையாக கொண்டு கட்டுரைகளை பிரசுரிக்க முன்னுரிமை அளிக்கப்பட மாட்டாது.
கட்டுரை தேர்வு முறையானது, முற்றிலும் தரம் மற்றும் தகுதி அடிப்படையில் மட்டுமே நடைபெறுகிறது.
கட்டுரைகளை பிரசுரத்திற்கு தேர்ந்தெடுப்பதில் ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.
கட்டுரை வெளியீடு தொடர்பாக எந்த பரிந்துரையும் தகவல்தொடர்புகளும் அனுமதிக்கப் படுவதில்லை.
செம்மையான மதிப்பாய்வு முறை:
சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் இரட்டை குருட்டு மதிப்பாய்வு முறைக்கு உட்படுத்தப்படும். அதாவது, கட்டுரை ஆசிரியரின் பெயர் மற்றும் அடையாளம் மதிப்பீட்டாளர்களுக்கு தெரியாது, அதே போல் மதிப்பீட்டாளர்களின் பெயர் மற்றும் அடையாளம் ஆசிரியருக்கு தெரியாது.
ஒவ்வொரு கட்டுரைக்கும் இரண்டு மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மதிப்பீட்டாளர்கள் கட்டுரையின் தரம், அசல் தன்மை, ஆய்வு முறை, கண்டுபிடிப்புகள், விவாதம், முடிவுகள் மற்றும் ஒட்டுமொத்த பங்களிப்பு போன்றவற்றை மதிப்பீடு செய்வார்கள்.
மதிப்பீட்டாளர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், ஆசிரியர் குழு கட்டுரையை ஏற்கலாமா, திருத்தங்கள் செய்ய வேண்டுமா அல்லது நிராகரிக்கலாமா என்பதை தீர்மானிக்கும்.
திருத்தங்கள் மற்றும் மறு சமர்ப்பிப்பு :
திருத்தங்கள் தேவைப்படும் கட்டுரைகள் ஆய்வாளருக்கு திருப்பி அனுப்பப்படும்.
ஆய்வாளர்கள் மதிப்பீட்டாளர்களின் பரிந்துரைகளுக்கு ஏற்ப திருத்தங்களை செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டுரையை மறு சமர்ப்பிக்க வேண்டும்.
மறு சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் மீண்டும் மதிப்பீடு செய்யப்படும்.
வெளியீடு :
ஏற்கப்பட்ட கட்டுரைகள் “ஆயுத எழுத்து” இதழில் வெளியிடப்படும்.
வெளியீட்டிற்கு முன், கட்டுரைகள் இறுதி திருத்தம் மற்றும் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும்.
பதிப்புரிமை :
ஆய்வாளர்கள் பதிப்புரிமையை தங்கள் வசம் வைத்துக்கொண்டு அதே சமயம் மற்றும் கட்டுரையை கிரியேட்டிவ் காமன்ஸ் CC BY-ND 4.0 உரிமத்தின் கீழ், ஆயுத எழுத்து இதழிற்கு நிபந்தனையற்ற வெளியீட்டு உரிமைகளை வழங்குகிறார்கள். இந்த உரிமம், ஆய்வின் நோக்கத்தை இந்த இதழில் வெளியீடு செய்ய ஒப்புக்கொண்டு, அவர்களின் பணியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. (1.Journal Preliminary Criteria- 1.7. Open Access or Subscription – Based Policy திறந்த அணுகல் அல்லது சந்தா- கட்டணக் கொள்கை).
விதிமுறைகள் :
“ஆயுத எழுத்து” இதழில் வெளியாகும் அனைத்து கட்டுரைகளும் அதன் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டவை.
ஆசிரியர் குழு, மதிப்பீட்டாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் அனைவருக்கும் இந்த விதிமுறைகளும் கொள்கைகளும் பொதுவானவை.