LITERARY FINDINGS
International Journal of Multidisciplinary Research
ISSN : 2278 – 2311
1. JOURNAL PRELIMINARY CRITERIA
ஆய்விதழ் ஆரம்ப மதிப்பீட்டுஅளவுகோல்கள்
1.1. Journal Title
இதழ் தலைப்பு :
AYUDA EZHUTHU
ஆயுத எழுத்து
1.2. ISSN Number :
ISSN : 2278 7550 ( Print Version )
1.3. Periodicity and Continuity
பருவ காலம் மற்றும் தொடர்ச்சி :
காலாண்டு இதழ்: ஏப்ரல் 2013 முதல் அக்டோபர் 2017 வரை
2013 : ஏப்ரல், ஜூலை, அக்டோபர்.
2014 : ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர்.
2015 : ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர்.
2016 : ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர்.
2017 : ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர்.
மாதாந்திர இதழ்: ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2019 வரை
2018 : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
2019 : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்.
காலாண்டு இதழ்: ஜனவரி 2020 முதல் ஜனவரி 2025 வரை
2020 : ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர்.
2021 : ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர்.
2022 : ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர்.
2023 : ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர்.
2024 : ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர்.
மாதாந்திர இதழ் : ஜனவரி 2025 முதல்
2025 : ஜனவரி, பிப்ரவரி,
1.4. Contact and Publication Details
தொடர்பு மற்றும் வெளியீட்டு விவரங்கள் :
ஆயுத எழுத்து
பன்னாட்டு தமிழியல் ஆய்விதழ்
பல்லவி பதிப்பகம்
590, கணபதிநகர், கணபதிபாளையம் நால் ரோடு சந்திப்பு, கரூர் மெயின் ரோடு, ஈரோடு-638153, தமிழ்நாடு.
தொலைபேசி: 0424-3591515
அலைபேசி : 97919 51549, 94422 51549.
மின்னஞ்சல்: ayudaezhuthujournal@gmail.com
1.5. Transparent Review Policy
வெளிப்படையான மதிப்பாய்வுக் கொள்கை :
ஆயுத எழுத்து பன்னாட்டு தமிழியல் ஆய்வு இதழில் வெளியாகும் அனைத்து ஆய்வு கட்டுரைகளும் செம்மையான மதிப்பாய்வு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்த செயல்முறையின் நோக்கம், இவ்விதழில் வெளியிடப்படும் கட்டுரைகளின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் உறுதி செய்வதாகும்.
1.5.1. மதிப்பாய்வு செயல்முறை:
கட்டுரை சமர்ப்பித்தல்:
கட்டுரையை ஆய்வாளர் சமர்ப்பித்தவுடன், அதன் தலைப்பு, சுருக்கம் மற்றும் ஆய்வுத் துறையின் அடிப்படையில் பொருத்தமான மதிப்பீட்டாளர்களைத் தேர்ந்தெடுக்க முதல் கட்டப் பணியை ஆசிரியர் குழு தொடங்கும்.
மதிப்பீட்டாளர் தேர்வு:
தேர்ந்தெடுக்கப்பட்ட மதிப்பீட்டாளர்கள், ஆய்வுக் கட்டுரையானது அவர்களின் நிபுணத்துவத் துறையில் தொடர்பு உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக தலைப்பு மற்றும் சுருக்கத்தை மதிப்பாய்வு செய்வார்கள்.
கட்டுரை மதிப்பாய்வு:
மதிப்பீட்டாளர்கள் கட்டுரையின் தரம், அதன் அசல் தன்மை, வழிமுறை, முடிவுகள் மற்றும் ஒட்டுமொத்த பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விரிவாக மதிப்பாய்வு செய்வார்கள்.
கருத்து மற்றும் பரிந்துரைகள்:
மதிப்பீட்டாளர்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை ஆசிரியர் குழுவுக்கு வழங்குவார்கள்.
திருத்தம் மற்றும் மறு சமர்ப்பிப்பு:
ஆசிரியர்குழு, மதிப்பீட்டாளர்களின் கருத்துக்களைப் பெற்று, கட்டுரையில் திருத்தங்கள் தேவைப்பட்டால் அவற்றைசெய்ய வேண்டி கட்டுரையாளருக்கு தகவல் தெரிவிப்பார்கள். பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் செய்யப்பட பிறகு கட்டுரையாளர் மீண்டும் சமர்ப்பிக்கலாம்.
இறுதி முடிவு:
ஆசிரியர் குழு, மதிப்பீட்டாளர்களின் கருத்துக்கள் மற்றும் திருத்தப்பட்ட கட்டுரையைப் பரிசீலித்து, வெளியீட்டிற்கான இறுதி முடிவை எடுக்கும்.
1.5.2. மதிப்பீட்டாளர் பணிகள் :
அக்கறை மற்றும் நடுநிலைமை:
மதிப்பீட்டாளர்கள் ஆய்வுக் கட்டுரையை கவனமாகவும், நடுநிலையாகவும் மதிப்பாய்வு செய்வார்கள். இவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் அல்லது சார்புகள் மதிப்பாய்வு முடிவுகளை பாதிக்காது.
தவறாமல் கருத்து தெரிவித்தல்:
மதிப்பீட்டாளர்கள் தங்கள் கருத்துக்களை தெளிவாகவும், ஆக்கப்பூர்வமாகவும், சரியான நேரத்திற்குள்ளும் தெரிவித்து விடுவார்கள்.
இரகசியத்தன்மை:
மதிப்பீட்டாளர்கள் மதிப்பாய்வு செய்யும் கட்டுரையின் உள்ளடக்கத்தை ரகசியமாக வைத்திருப்பார்கள்.
பரிந்துரை :
ஆய்வு கட்டுரையை வெளியீடு செய்வது தொடர்பாக இதழ் ஆசிரியர் குழு உட்பட யாருடைய பரிந்துரையும் இவர்கள் ஏற்க மாட்டார்கள்.
மதிப்பீட்டாளர் – கட்டுரையாளர் தொடர்பு :
மதிப்பீட்டாளர்களுக்கு கட்டுரையாளரின், பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண்கள் இல்லாமல் கட்டுரை மதிப்பாய்வுக்கு வழங்கப்படுவதால் மதிப்பீட்டாளர் கட்டுரையாளரிடமோ , கட்டுரையாளர் மதிப்பீட்டாளரிடமோ ஒருபோதும் தொடர்பு கொள்ள இயலாது.
1.5.3. கட்டுரையாளர் கடமைகள் :
அசல் படைப்பு :
சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் ஆய்வாளரின் அசல் படைப்பாக இருக்க வேண்டும்.
துல்லியமான தரவு :
கட்டுரையில் பயன்படுத்தப்படும் தரவு மற்றும் தகவல்கள் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் இருக்க வேண்டும்.
ஒழுக்கமான நெறிமுறைகள் :
ஆய்வாளர்கள் தங்களது படைப்புகளுக்கு ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மதிப்பாய்வு கருத்துக்களுக்கு பதிலளித்தல் :
ஆய்வாளர்கள் மதிப்பீட்டாளர்களின் கருத்துக்களை கவனமாகப் பரிசீலித்து, உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
1.5.4. இதழின் நிலைப்பாடுகள் :
வெளிப்படையான மதிப்பாய்வு கொள்கை:
“ஆயுத எழுத்து” இதழ் அதன் மதிப்பாய்வு கொள்கையை(Review Policy) வெளிப்படையாகவும், தெளிவாகவும் வெளியிட்டுள்ளது.
நியாயமான மதிப்பாய்வு செயல்முறை:
இதழ் அனைத்து கட்டுரைகளையும் நியாயமாகவும், பாரபட்சமின்றியும் மதிப்பாய்வு செய்கிறது.
தரம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது:
இவ்விதழ் வெளியிடும் கட்டுரைகளின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.
1.6. Website on a Certified Domain
அதிகாரப்பூர்வமான இணைய வலைத்தளம்:
என்பது எங்களது பதிவு பெற்ற இணைய வலைத்தளமாகும். தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படும் எங்களது இணையத் தளம் , தரவு திருட்டு, ஹேக்கிங் போன்ற சைபர் தாக்குதல்களிருந்து தற்காத்து கொள்ள SSL சான்றிதழ் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப பாதுகாப்புகளைக் கொண்டுள்ளது. இது, தவறாமல் தினந்தோறும் புதுப்பிக்கப் படுகிறது.
1.7. Open Access or Subscription – Based Policy
திறந்த அணுகல் அல்லது சந்தா- கட்டணக் கொள்கை:
ஆயுத எழுத்து தமிழியல் ஆய்வு இதழ், தமிழ் மொழி மற்றும் இலக்கிய ஆய்வுகளை மேம்படுத்துவதில் முன்னணி வகிக்கிறது. அனைத்து தரப்பு வாசகர்களும் ஆய்வாளர்களும் எளிதில் அணுகக்கூடிய வகையில், பின்வரும் கொள்கையை நாங்கள் முன்மொழிகிறோம்.
அணுகல் கொள்கை:
ஆயுத எழுத்து இதழில் வெளியாகும் அனைத்து ஆய்வு கட்டுரைகளும் திறந்த அணுகல் (Open Access) முறையில் வெளியிடப்படும். அதாவது, எந்தவொரு கட்டணமும் இன்றி, இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கட்டணக் கொள்கை:
ஆயுத எழுத்து இதழில் வெளியாகும், கட்டுரைகளை படிப்பதற்கும் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கும் எந்தவொரு கட்டணமும் இல்லை. வாசகர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் :
ஆயுத எழுத்து இதழில் வெளியாகும் கட்டுரைகள், கிரியேட்டிவ் காமன்ஸ் (Creative Commons) உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இந்த கொள்கை, தமிழ் ஆய்வுகளை உலகளாவிய அளவில் கொண்டு செல்வதற்கும், புதிய ஆய்வுகளை ஊக்குவிப்பதற்கும் உதவும்.
CC BY-ND 4.0
AYUDA EZHUTHU © 2025 by PALLAVI PATHIPPAKAM is licensed under Creative Commons Attribution-No Derivatives 4.0 International
Canonical URL : https://creativecommons.org/licenses/by-nd/4.0/
Copyright License
பதிப்புரிமை:
Researchers retain copyright while granting the journal unconditional publishing rights under the Creative Commons CC BY-ND 4.0 license. This license permits sharing their work with others, acknowledging the purpose of the study and its initial publication in this journal.
ஆய்வாளர்கள் பதிப்புரிமையை தங்கள் வசம் வைத்துக்கொண்டு அதே சமயம் மற்றும் கட்டுரையை கிரியேட்டிவ் காமன்ஸ் CC BY-ND 4.0 உரிமத்தின் கீழ், ஆயுத எழுத்து இதழிற்கு நிபந்தனையற்ற வெளியீட்டு உரிமைகளை வழங்குகிறார்கள். இந்த உரிமம், ஆய்வின் நோக்கத்தை இந்த இதழில் வெளியீடு செய்ய ஒப்புக்கொண்டு, அவர்களின் பணியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.
ஆயுத எழுத்து தமிழில் ஆய்வு இதழ், தமிழ் மொழி மற்றும் இலக்கிய ஆய்வுகளை மேம்படுத்துவதில் முன்னணி வகிப்பதால் அனைத்து தரப்பு வாசகர்களும் ஆய்வாளர்களும் எளிதில் அணுகக் கூடிய வகையில் பின்வரும் கொள்கைகளை முன் மொழிகிறது.
Creative Commons Licenses
கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்:
தமிழ் ஆய்வுகளை உலகளாவிய அளவில் கொண்டு செல்வதற்கும், புதிய ஆய்வுகளை ஊக்குவிப்பதற்கும் உதவும் வகையில் ஆயுத எழுத்து இதழில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் இந்த கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகிறது.
1.8. Integration with National / International Repositories
தேசிய / சர்வதேச மின் – இணையக் களஞ்சியங்களுடன் ஒருங்கிணைப்பு :
Under Process
1.9. Archival Policy
காப்பகக் கொள்கை :
ஆயுத எழுத்து தமிழியல் ஆய்வு இதழின் முந்தைய இதழ்களைப் பராமரிப்பது மற்றும் கிடைக்கச் செய்வது தொடர்பான காப்பகக் கொள்கை.
1.9.1. முந்தைய இதழ்களைப் பராமரித்தல்:
ஆயுத எழுத்து இதழின் அனைத்து முந்தைய இதழ்களும் டிஜிட்டல் முறையில் PDF கோப்புகளாகப் பாதுகாக்கப்படுகின்றன.
இந்த PDF கோப்புகள் பாதுகாப்பான சேமிப்பகத்தில் சேமிக்கப்பட்டு, அவ்வப்போது காப்புப் பிரதி எடுக்கப்படுகின்றன.
அச்சுப் பிரதிகள் தயாரிக்கும் போது, அவை ஆவணக் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.
1.9.2. முந்தைய இதழ்களைக் கிடைக்கச் செய்தல்:
ஆயுத எழுத்து இதழின் முந்தைய இதழ்கள் அனைத்தும் அதன் அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் (www.ayudaezhuthu.com) இலவசமாகக் கிடைக்கின்றன.
இணையதளத்தில், ஒவ்வொரு இதழும் தனித்தனி PDF கோப்பாகப் பதிவேற்றப்பட்டு, வாசகர்கள் எளிதாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்யப்பட்ட PDF கோப்புகளை வாசகர்கள் தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
1.9.3. காப்பகக் கொள்கையின் நோக்கங்கள்:
ஆயுத எழுத்து இதழின் முந்தைய வெளியீடுகளைப் பாதுகாத்து, எதிர்கால ஆய்வாளர்கள் மற்றும் வாசகர்களுக்குக் கிடைக்கச் செய்தல்.
தமிழியல் ஆய்வுகளின் வளர்ச்சிக்கு உதவுதல் மற்றும் முந்தைய ஆய்வுகளின் தொடர்ச்சியை ஊக்குவித்தல்.
ஆயுத எழுத்து இதழின் நம்பகத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் அதன் வரலாற்றுச் சிறப்பைப் பாதுகாத்தல்.
1.9.4. காப்பகக் கொள்கையில் மாற்றங்கள்:
ஆயுத எழுத்து இதழின் காப்பகக் கொள்கையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப் படலாம். . அவ்வாறு செய்யப்பட்டால், அவை இதழின் இணையதளத்தில் வெளியிடப்படும்.